28 Sept 2017

விழிப்புணர்வுப் பேரணி

SHARE

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வை அனுஷ‪;டிக்கும் முகமாக ஓக்ரோபெர் முதலாம் திகதி விழிப்புணர்வுப் பேரணியொன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்திருப்பதாக ஏறாவூர் நகர பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. றமீஷா தெரிவித்தார்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக அங்கத்தவர்கள், முதியோர் சங்கங்களின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதாக இந்த விழிப்புணர்வுப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு ஏறாவூர் யங் அல் பதாஹ் விளையாட்டுத் திடலிலிருந்து விழிப்புணர்வுப் பேரணி ஆரம்பமாகி ஏறாவூர் றஹ{மானிய வித்தியாலய மைதானத்தில் முடிவடையவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கிடையேயான போட்டி நிகழ்ச்சிகளும், சர்வதேச சிறுவர் தினப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்புக்களும் கௌரவிப்புக்களும் இடம்பெறவுள்ளன.


SHARE

Author: verified_user

0 Comments: