20 Sept 2017

செப்ரெம்பெர் மாதம் தொடக்கம் இருபக்க செவிகள் புலப்படும்படியான புகைப்படத்துடனேயே அடையாள அட்டை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன

SHARE
செப்ரெம்பெர் மாதம் தொடக்கம் இருபக்க செவிகள் புலப்படும்படியான புகைப்படத்துடனேயே அடையாள அட்டை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. கிழக்கு மாகாண ஆட்பதிவுத் திணைக்கள பதவிநிலை உதவியாளர் ஷெ‪ய்ன் முஹம்மத் ஸ{ல்பிகார்
இவ்வருடம் செப்ரெம்பெர் மாதம் தொடக்கம் இருபக்க செவிகள் புலப்படும்படியான புகைப்படத்துடனேயே அடையாள அட்டை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண ஆட்பதிவுத் திணைக்கள பதவிநிலை உதவியாளர் ஷெ‪ய்ன் முஹம்மத் ஸ{ல்பிகார் தெரிவித்தார்.
புதிய நடைமுறை தொடர்பாகக் கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது@ ஸ்மார்ட் கார்ட் எனும் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்குரிய முன்னேற்பாடாக ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

புதிய இருபக்க காதுகளைக் கொண்ட ஆளொருவரின் புகைப்படம் 35 மில்லி மீற்றர் அகலமும் 45 மில்லி மீற்றர் உயரமும் கொண்டதாக இருக்க வேண்டும். அதனடிப்படையிலேயே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் மாகாண ஆட்பதித் திணைக்கள அலுவலகம் மட்டக்களப்பில் இயங்குவதால் தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களை திருத்தமாக ஆளடையாள அட்டையில் பொறித்துக் கொடுக்க முடிகின்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கூடாக நாளாந்தம் சுமார் 200 ஆளடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை நாம் பெறுகின்றோம்.
இவற்றில் தமது உருக்குலைந்த, தெளிவில்லாத ஆளடையாள அட்டைகளைக் கொண்டுள்ளவர்களும் மற்றும் பெயர் மாற்றங்களைச் செய்ய விண்ணப்பிப்போருமாக புதுப்பிப்பதற்காக சுமார் 100 பேருடைய விண்ணங்கள் தினமும் மாகாண ஆட்பதித் திணைக்களத்துக்கு வந்து சேர்கின்றன.
நாம் விண்ணப்பதாரிகளிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்களை ஏற்பதில்லை. அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் கிராம சேவகர், பிரதேச செயலாளர் ஊடாக ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் 2017ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 15 வயதைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் தேசிய ஆளடையாள அட்டைகள் வழங்கும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

இதனால் கூடுதலான மாணவர்களும் தேசிய ஆளடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

SHARE

Author: verified_user

0 Comments: