மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரவு நேர விரைவுப் புகையிரதத்தில் மோதுண்டவரின் சடலம் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக எறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இனம் தெரியாத இந்த ஆண் மட்டக்களப்பு திராய்மடுப் பகுதியில் வைத்து புகையிரதத்தில் மோதுண்டதாகவும் அவரது சடலம் ரெயில்வே அலுவலர்களால் மீட்கப்பட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை 31.08.2017 இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் புகையிரதத்தில் மோதுண்டு இறந்த ஆணின் விவரங்களை விசாரித்து வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment