மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய நோயாளர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றது.
அடிக்கல்லினை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி சுகாதார அமைச்சர் பைஸர் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் முகமட் நசீர், விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்ணம் ஆகியோர் நட்டு வைத்தனர்.
மத்திய சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், 18.46மில்லியன் ரூபாய் செலவில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment