5 Sept 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

SHARE
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தினை மையப்படுத்தி நடமாடும் சேவை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு  ஞாயிற்றுக்கிழமை (03)  ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.  
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனின்  தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன்போது இறப்பு, பிறப்பு,விவாகச்சான்றீதழ்கள் விடயம்,அரச காணி,கமநல சேவை, சட்ட உதவி ஆணைக்குழு, அடிப்படை மனித உரிமைகள், ஓய்வூதியம், நீர், மின்சாரம், உள்ளிட்ட 25 வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு நடமாடும் சேவையில் 17 அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் பங்குபற்றியது.

இந்நிகழ்வில் மேலும்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன்  , அமைச்சின் செயலாளர் w.P.m.e விக்கிரமசிங்க, உதவிச்செயலாளர் சந்திரிகா ரூபசிங்க,கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரெத்தின தேரர்,உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், ,பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.





SHARE

Author: verified_user

0 Comments: