மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஆரையம்பதி நகரத்தில் இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்து மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை நண்பகல் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னால் பிரதான வீதியருகே நடந்து சென்று கொண்டிருந்த மெக்கானிக் மீது கார் மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார்.
ஆரையம்பதியைச் சேர்ந்த துரைராசா மகேந்திரன் (வயது 53) என்பவரே பலியானவராகும்.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை 03.09.2017 ஆரையம்பதி பிரதான வீதியில் முச்சக்கரவண்டி மீது கார் மோதியதில் முச்சக்கரவண்டிச் சாரதியான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கே. சிபோஜன் (வயது 18) என்பவர் படுகாயமடைந்து உடனடியாக ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் பற்றி காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment