1 Sept 2017

சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் விடுதலைக்காக நல்லாட்சி பாடுபடுமாயின் தற்போதைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்

SHARE
சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் விடுதலைக்காக நல்லாட்சி பாடுபடுமாயின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு-பதுளைவீதி கரடியனாறில் 81.4 மில்லியன் ரூபாய் செலவுத் தொகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தை வியாழக்கிழமை 31.08.2017 திறந்து வைத்த பின்னர் அங்கு பங்குபற்றியிருந்த ஜனாதிபதி உட்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்
அரசியல் யாப்பின் 20வது சரத்து சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இன்னும் சில திருத்தங்களுடன் எமது கிழக்கு மாகாண சபைக்கு வரும் பட்சத்தில் அதற்கு முழுமையாக ஆதரவளிக்க  எமது மாகாண சபை தயாராக உள்ளது.

எனினும், சிறுபான்மை இனங்களக்க உரிமை கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த நல்லாட்சியைச் சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவும் முன்னாள் ஆட்சியாளர்களில் இனவாதிகளான பலர் மும்முரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

சிறந்தொரு அரசியல் யாப்புக் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் சிறுபான்மை இனங்கள் நன்மையடைந்து விடக் கூடாது என்பதற்காக அவர்கள் கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.

ஆனால், இந்த நல்லாட்சி மூலமாகவே சிறுபான்மை மக்களுக்கு சிறந்ததொரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதற்காக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், றவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
இந்த விடயத்திலே விட்டுக் கொடுப்புடன் பல தியாகங்களைச் செய்வதற்கும் நாம் யதாரகவுள்ளோம்.

சிறுபான்மைக்கு சிறந்த வரப்பிரசாதங்களை அரசியல் மாற்றத்தினூடாக இந்த நல்லாட்சி அரசு கொண்டு வருமாக இருந்தால் காலமெல்லாம் இந்த நல்லாட்சி நீடிக்க நாம் தியாகம் செய்வோம். ஒஉருபோதும் ஆட்சி கவிழ அனுமதியோம்.

1986இல் உருவாக்கப்பட்டு யுத்தத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் 6வது பெரிய பண்ணையாக விளங்கிய கரடியனாறு விவசாயப் பண்ணையை மீளக் கட்டியெழுப்ப நாம் 30 வருடங்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

அந்தப் பண்ணை தொடர்ந்து இயங்கியிருந்தால் கிழக்கு மாகாணம் விவசாயத்தில் பாரிய தன்னிறைவு கண்டிருக்கும், அநேகர் தொழில்வாய்ப்புப் பெற்றிருப்பார்கள், வளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

எனினும் நாம் துரதிருஸ்ட வசமாக 30 வருடங்கள் யுத்தத்தினால் பின் தங்கி விட்டோம்.

இந்த விடயத்திலே எமக்கு நல்லாட்சியின் நாயகர்களான ஜனாதிபதியினதும் பிரதம மந்திரியினதும் ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் இருக்குமாக இருந்தால் நாட் கிழக்கிலுள்ள வளங்களைப் பாவித்தே இன்னும் 5 வருட காலப் பகுதிக்குள் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும்.
கிழக்கிலிருந்து தேசியத்திற்குப் பங்களிப்புச் செய்கின்ற விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில்கள், மனித வளங்களினூடாக நாம் பாரிய பங்களிப்பையும் அபிவிருத்தியையும் கண்டு கொள்ள முடியும்.

உங்களது 30 மாத கால ஆட்சிக்காலத்தில் 18 தடவைகள் நீங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருப்பது நீங்கள் கிழக்கு மாகாணத்தின் மீது கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகின்றது.

எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதினூகவே இப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும். அந்த வகையில உறுகாமம் குளத்தை அதி நவினமாக அபிவிருத்தி செய்யும் எமது திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோரி நிற்கின்றேன்”என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: