மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்படப்ட சின்னவத்தைக் கிராமத்தினுள் சனிக்கிழமை (16) அதிகாலை புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள குடிசைவீடுகளை உடைத்துத் தாக்கியுள்ளதுடன் விஸ்வலிங்கம் சுபாஸ்கரன் வயது 22 என்ற இளைஞன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
சனிக்கிழமை அதிகாலை கிராமத்தில் புகுந்த காட்டுயானைகளினால் அங்குள்ள மக்கள் அல்லோல கல்லேலப்பட்டு, பீதியடைந்துள்ளனர். இதனால் மக்கள் அதிகாலை வேளையில் ஒன்றுதிரண்டு சத்தமிட்டும், தீப்பந்தம் ஏந்தியும், காட்டுயானைகளை ஒருவாறு கிராமத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் யானைகள் அங்கிருந்த 4 குடிசை வீடுகளை உடைத்து அழித்துள்ளதுடன், உணவுக்காக வைத்திருந்த நெல்மூடைகளையும், துவம்வம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment