5 Sept 2017

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் காணாமல்போனோரின் 27வது நினைவு நிகழ்வு பிள்ளையார் ஆலயத்தில் அனுஷ்டிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் 27வது நினைவு நிகழ்வு செவ்வாய்க்கிழமை 05.09.2017 ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.
1990ஆம் ஆண்டு செப்ரெம்பெர் 5ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது அங்கு தஞ்சமடைந்திருந்தோரில் 158 ஆண்கள்  அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் எவரும் வீடு திரும்பியிருக்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கைது செய்து கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு என்ன ஆனது என்பதும் இதுவரைத் தெரியவராத நிலையில் உறவினர்கள் வருடாந்தம் நினைவு நிகழ்வை அனுஷ்டித்து வருகின்றனர்.

காணாமல்போன உறவினர்களின் நினைவுக் குழுவின் சார்பில் அதன் ஏற்பாட்டாளர்கள்,  அரியமலர் தலைமையில், பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ இ. கோபாலசிங்கம் சிவாச்சாரியார் விசேட பூஜை வழிபாடுகளை நடாத்தினார்.






SHARE

Author: verified_user

0 Comments: