செப்ரெம்பெர் மாதம் 23ம் திகதி நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மறுநாள் 24ஆம் திகதிக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
அன்றைய தினம் காலை 10.00 மணி தொடக்கம் இல 184 பி 4 வாடி வீட்டு வீதி கல்முனையில் அமைந்துள்ள ஜெயா திருமண மண்டபத்தில் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெறும் இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இராவரோதயம் சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவம் துரைராசசிங்கம் தெரிவித்தார்.
கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள், புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விடயங்கள், சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விடயங்கள் பற்றிய விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment