மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சனிக்கிழமை (26) விஜயம் செய்த மீள்குடியேற்ற அமைச்சர்; சுவாமிநாதன் கிழக்கில் பிரசித்தி பெற்ற (படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள) சிவன் ஆலயங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் செய்து நன்பகல் ஆலய வழிபாடுகளை மேற்கொண்டார்.
தற்போது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் அவ் உற்சவ கால மதிய பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டதுடன் அவ்வாலயத்தில் இடம்பெற்றுவரும் புனரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டதுடன் ஆலயத்தின் வரலாறு தொன்மை பற்றியும் முக்கிய தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இவரின் விஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்; மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment