27 Aug 2017

பாடசாலை ஆசிரியரின் மீள் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

SHARE
மட்டக்களப்பு - கருவேப்பங்கேணி விபுலானந்தாக் கல்லூரி மாணவர்களும் பெற்றோரும் இணைந்து பாடசாலைக்கு ஆசிரியர் மீள் வருகையைக் வருகையைக் கண்டித்து, சனிக்கிழமை (26.08.2017) பாடசாலையின் முன் வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் ஆசிரியரால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு மீண்டும் குறித்த பாடசாலையில் கடமை புரியலாம் என்று நீதி மன்றம் வழங்கிய ஆணையின் கீழ், இந்த ஆசிரியர் மீண்டும் பாடசாலைக்கு சமூகமளித்து பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.  

இதையடுத்தே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த ஆசிரியர் எமது பாடசாலைக்கு வேண்டாம், பாடசாலையைச் சீரழிக்காதே, எதிர்கால சமூகத்தை சீரழிக்காதே, சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்து, கல்வி கற்கும் உரிமையைப் பறிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தமது கோரிக்கை நிறைவேற்றப்படாதபட்சத்தில் தாம் தொடர்ச்சியான எதிர்ப்பை மேற்கொள்ளவுள்ளதாக பெற்றோரும் மாணவர்களும் தெரிவித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: