மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய மாணவிகள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
தமது பாடசாலைக்கான ஒன்றுகூடல் மண்டபம் ஒன்றை அமைத்துத் தருமாறு பாடசாலை மாணவிகள் ஜனாதிபதியிடம் தாழ்மையுடன் விண்ணப்பித்திருந்தார்கள்.
மாணவிகளின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி உடனடியாக அவர்களுடைய பாடசாலையில் ஒன்றுகூடல் மண்டபத்தை அமைத்துத் தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.
இதையடுத்து பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும், ஜனாதிபதியின் உரையும் நடைபெற்றதுடன், ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு - பதுளைவீதி கரடியனாறில் 81.4 மில்லியன் ரூபாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment