மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் செய்துள்ளார்.
மட்டக்களப்பு - பதுளை வீதியில் உள்ள கரடியனாறில் 81.4 மில்லியன் ரூபாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காகவே இவர் இன்று விஜயம் செய்துள்ளார்.
மட்டக்களப்பில் ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டதுடன், பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இக்கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்திருந்தார்.
இதேவேளை, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர்(1948ஆம் ஆண்டின் பின்) கரடியனாறு பகுதிக்கு விஜயம் செய்த முதல் அரச தலைவர் என்ற பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment