மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடியில் திங்கட் கிழமை (28) மாலை இடம்பெற்ற விபத்தில் மலையகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனிப்பட்ட வேலை நிமித்தம் மட்டக்களப்பு வந்த இவர்கள் மீண்டும் சொந்த இடத்திற்கு திரும்பிச்சென்ற வேளை அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் அருகாமையில் இருந்த தூணுடன் மோதி தூக்கி வீசப்பட்டதாகவும் பின்னர் பொலிஸாரின் உதவியுடன் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இடம்பெற்ற இவ்விபத்து சம்பந்தமாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் விபத்தில் காயமடைந்தவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment