(தனு)
கிழக்க மாகாணத்தில் ஆனைப்பந்தி எனும் புண்ணிய ஷேஸ்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி திருவருள் புரிந்து வரும் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் வியாழக் கிழமை (31) சுபமுகூர்த்த வேளையில் அடியார்களின் அரோகரா கோசத்துடன் அஷ்ட பந்தன திரிதள விமான பஞ்ச இராஜகோபுர ஸப்ததச குண்ட பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக இடம்பெற்றது. கடந்த 7 வருடங்களாக பாலஸ்தானம் செய்யப்பட்டு திரிதள பஞ்ச ராஜகோபுரப் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டு வந்தன.
கும்பாபிஷேகக் கிரிஜைகள் கடந்த 23.08.2017 அன்று விநாயகர் வழிபாடு புண்ணியா யாகம் இயந்திர அபிஷேகம் கிராமசாந்தி என்பன இடம்பெற்று 28.08.2017 அன்று காலை தொடக்கம் 30.08.2017 அன்று வரை மூலமூர்த்திக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்ற தொடர்ந்து வியாழக்கிழமை (31) வேத பாராயணம் பஞ்ச கௌவியப் பூஜை தீபாராதனை என்பன இடம்பெற்று காலை 7 மணி 17 நிமிடமளவில் விநாயகப் பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மங்கள தரிசனம் விஷேட பூஜை இடம்பெற்றது. கும்பாபிஷேகக் கிரிஜைகளை யாழ்ப்பாணம் நாகபூசணியம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ கைலாச வாமதேவக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றன. தொடர்ந்து மண்டலாபிஷேகக் கிரிஜைகள் இடம்பெற்ற சங்காபிஷேகத்துடன் இவ்வாலய பெருஞ்சாந்தி விழா இனிதே நிறைவடையவுள்ளது.
0 Comments:
Post a Comment