மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் புதன்கிழமை (16) தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த இந்நிலையில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நிருவாக சேவையில் தரம் ஒன்றைச் சேர்ந்த இவர் ஏற்கனவே பதில் பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் என பல பதவிகளை இதற்கு முன்னர் வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்ற பிரதேச செயலாளராக கடமைபுரிந்து வந்த எஸ்.இரங்கநாதன் நாவிதன்வெளி பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment