புதன்கிழமை 02.08.2017 பிற்பகல் காத்தான்குடி மட்டக்களப்பு பிரதான வீதி காத்தான்குடி நகரில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றித் பொலிஸார் தெரிவிக்கையில்@ மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.சபையின் பஸ்ஸ{ம் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் சுமார் 55 வயது மதிக்கத் தக்க மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்து இடம்பெற்றதும் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்தில் பஸ்ஸினால் மோதப்பட்டு உடைந்து போன மோட்டார் சைக்கிளையும் பஸ்ஸையும் கைப்பற்றி காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இது விடயமாக இ.போச. பஸ் சாரதியையும் மற்றும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
0 Comments:
Post a Comment