மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பிரதான வீதியில் புதன் கிழமை (23) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இஸ்த்தலத்திலே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞன் முன்னே சென்ற பிக்கப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிர்கொண்டு வந்த தனியார் பேரூந்தில் மோதியதாலேயே இவ்விபத்து சம்பதித்துள்ளது.
இதில் உயிரிழந்தவர் களுதாவளையைச் சேர்ந்த 22 வயதுடைய ம.இதயராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விளைஞன் பயனித்த மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment