12 Jul 2017

தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் ஆசிரியர் தளவாடங்கள் வழங்கி வைப்பு

SHARE
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஆசிரியர் தளவாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இன, மத பேதமற்ற முறையில்  தேவையுடைய, பின்தங்கிய பிரதேசங்களை மையப்படுத்தியதாக தனது சொந்த நிதியினூடாகவும், தனக்கு ஒதுக்கப்பட்ட மாகாண சபை நிதி ஒதுக்கீடுகளினூடாகவும் தொடர்ச்சியாக இத்தகைய பல்வேறுபட்ட பாடசாலை அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

பாடசாலை அதிபர் எஸ். உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: