12 Jul 2017

43 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

SHARE
மண்முனைப் பற்று  பிரதேச செயலக  சமுர்த்தி அபிவிருத்தி  திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட 43 பயனாளிக் குடும்பங்களுக்கு வெள்ளிக்கிழமை வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


பிரதேச செயலாளர்  என். சத்தியானந்தி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்  பி. குணரத்தினம், மண்முனை பற்று  பிரதேச செயலக தலைமையக  முகாமையாளர் ஏ. தனேந்திரராசா, முகாமைத்துவப்   பணிப்பாளர்  எஸ். இராசலிங்கம், மாவட்ட   முகாமையாளர்கள், கருத்திட்ட முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள்  ஆகியோரும் கலந்துகொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: