மட்டக்களப்பு - அக்கரைப்பற்று பிரதான வீதியில் அக்கரைப்பற்று நகரின் தெரு மத்தியில் நிறுவப்பட்டிருந்த மின் கம்பத்தை முட்டிமோதி வீழ்த்திவிட்டு விரைவாகத் தப்பிச் சென்ற லொறியை தாம் கைப்பற்றியதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, அதிகாலையில் அக்கரைப்பற்று நகரத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த சீமெந்து ஏற்றிய லொறியொன்று அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரிக்குச் சமீபமாக நடுத்தெருவில் நிறுவப்பட்டிருந்த மின்கம்பம் ஒன்றுடன் மீது மோதி அதனை வீழ்த்தியுள்ளது.
இதனை அடுத்து லொறியின் சாரதி லொறியை நிறுத்தி இச்சம்பவம்பற்றி போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிவிக்காமல் தப்பிச் செல்லும் நோக்கத்தோடு தொடர்ந்து பயணித்துள்ளார்.
எனினும், பொதுமக்களின் தகவலுடன் இதுபற்றி அறிந்து கொண்ட பொலிஸார் லொறி பயணித்துக் கொண்டிருப்பது பற்றி வீதியெங்கிலும் காவல் கடமையிலுள்ள பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அவ்வேளையில் அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் பெரியமுகத்துவாரப் பகுதியில் வைத்து லொறி தடுத்து நிறுத்தப்பட்டதுடன் லொறிச் சாரதியும் பொலிஸாரால் செய்யப்பட்டார்.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.





0 Comments:
Post a Comment