23 Jul 2017

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு - அமைச்சின் செயலாளர் ரேணுகா ஏக்கநாயக்க.

SHARE
வறுமைப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வறுமையை இல்லாது ஒழிப்பதே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இன்றைய பணியாகும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரேணுகா ஏக்கநாயக்க தெரிவித்தார். சனிக்கிழமை (22) களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தின் அடிக்கல் நாட்டி வைத்து வரவேற்புரை ஆற்றும்போது இதனைத் தெரிவித்தார்

 இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு. கிராமங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், உணவுப்பாதுகாப்பு, கிராமங்களின் உட்கட்டமைப்பை விருத்தி செய்தல், என மூன்று காரணங்களாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை கிராமத்தில் அமையவிருக்கும் பொருளாதார மத்திய நிலையத்தில் ஐம்பது கடைத்தொகுதிகளைக் கொண்டதாக இக்கட்டிடம் அமையப்பெற்றுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் உள்ள மக்களுக்கும், நாட்டிக்கும் நல்லதை செய்யவேண்டும்  என்று உருவாக்கப்பட்டதாகும். அதாவது பொருளாதாரத்தை உயர்த்துதல்வறுமையை ஒழித்தல்உட்பட கல்வி, விவசாயம், மீன்பிடி, உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல், போன்றவற்றை செய்து காட்டுவதாகும். இக்கட்டிடமானது எதிர்வரும் நவம்பர் மாதம் முடிவடையவுள்ளது. இதனால் பட்டிருப்புத்தொகுதி உட்பட மாவட்டம், மாகாணம், முழுமையான அபிவிருத்தியடையவுள்ளது. இதனால் பிரதேச வறுமை ஒழிக்கப்பட்டு,பொருளாதாரம் மேன்மையடையும், உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தியடைந்து மக்களின் மனதில் சமாதானம், சுபீட்சம் நிறைந்து காணப்படும். வறுமைப்பட்ட மக்களுக்கு நல்லதை செய்து காட்டுவது நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடாகும்  எனத் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: