(இ.சுதா)
தமிழ் மொழிதினப் போட்டியில் பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலய மாணவி தேசியரீதியாக மூன்றாம் இடம்.
பேச்சுப் போட்டியில் தேசியரீதியாக மூன்றாம் இடத்தினை பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலய மாணவி ஆ.பிதுர்ஷிகா பெற்றுபாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளார்.தமிழ் மொழிதினப் போட்டியில் பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலய மாணவி தேசியரீதியாக மூன்றாம் இடம்.
கிழக்கு மாகாணகல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிழக்குமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தமிழ்த்தினப் போட்டியின் இரண்டாம் பிரிவு பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் தேசியரீதியாக மூன்றாம் இடத்தினைபெற்றுள்ளார்.
தரம் 6 இல் கல்விகற்கும் குறித்தமாணவி கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாணவியினை போட்டிக்கு சிறந்த முறையில் வழிப்படுத்திய பாடசாலையின் அதிபர் சி.பேரின்பராசா மற்றும் தமிழ்ப் பாட ஆசிரியை திருமதி எம்.சசிகரன் உட்பட ஏனைய ஆசிரியர்களுக்கும் கல்விச் சமூகத்தினர் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment