மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று ( களுவாஞ்சிகுடி) பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் செவ்வாய்க் கிழமை (11) அப்பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
களுவாஞ்சிகுடி கல்விக் கோட்டத்திலிருந்து இடம்மாற்றம் பெற்றுச் சென்ற 5 ஆசிரியர்களுக்குப் பதிலீடாக வேறு ஆசிரியர்களைப் பெறுதல், அம்பாறையிலிருந்து வரும் நீர்க் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பு சீர் செய்யப்பட்ட பின்னர் மிகவிரைவில் இப்பிரதேசம் முழுவதும் சீரான குடி நீர் வினியோகம் செய்தல், துறை நீலாவணைப் பகுதியில் பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளரை நியமிக்க நடவடிக்கை எடுத்தல், நீர் வழிந்தோடும் தோணாக்களை மூடிவிடுவதைத் தடுத்தல் போன்ற பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் 01.06.2016 இல் இருந்து 30.06.2017 வரை எருசவில் மற்றும் மாங்காடு ஆகிய இடங்களில் இயங்குவதற்கு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், இவ்வருடத்திற்குரிய கேள்விமனுக்கோரலும் இடம்பெற்று 01.06.2017 இல் இருந்து 30.07.2018 வரைக்கும் மீண்டும் அதே பிரதேசங்களில் கள்ளுத்தவறணைகள் இயற்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விடையங்கள் தொடர்பில் பலருத் பல கருத்துக்களைத் தெரிவித:துள்ளனர். மேலும் இத்தவறணைகளை இல்லாமல் செய்து அரசாங்கத்தின் வருமானத்தை நிறுத்துவதற்குரிய அதிகாரம் எம்மிடம் இல்லை. இவ்விடையம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தான் ஆலேசனைகளைப் பெறவேண்டும், கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான உத்தியோகஸ்த்தர் இதுதொடர்பான விடையங்களை முன்னெடுப்பார், எருவிலில் அமைந்துள்ள கள்ளுத்தவறணையை மூடுமாறு கோரி அண்மையில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி அறிக்கை ஒன்றினையும் என்னிடம் சமர்ப்பித்திருந்தார்ள் இந்த அறிக்கையினை ஜனாதிபதிக்கும், அரசாங்க அதிபருக்கும், மதுவரித்திணைக்கள ஆனையாளருக்கும் அனுப்பியுள்ளேன் என இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ்.இரங்கநாதன் தெரிவித்தார்.
இதேவேளை சில ஊடகங்கள் மக்கள் பிரதிநிதிகளான எங்களைப் பற்றி பொய்யான செய்திகளை சில ஊடகங்கள் தெரிவிக்கின்னறன, ஊடகம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டுமே தவிர வேண்டியவர்களுக்கு வேண்டிய விதத்தில் எழுதுவதும், வேண்டாதவர்களுக்கு பொய் சொல்லி அவமதிப்பதுவுமாக ஊடகம் இருக்கக் கூடாது, என இதன்போது கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment