கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் மட்/பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் 18வயதின் கீழ் ஆண்கள் பிரிவு முதல் இடம் பெற்று சம்பியனாகி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இப்போட்டியானது திருகோணமலை மிகிந்தபுர மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது இறுதிச்சுற்றில் திரு/கந்தள மத்திய கல்லூரி மாணவர்களை எதிர் கொண்டு பலத்த போட்டிகளுக்கு மத்தியில் இம் மாணவர்கள் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.
கடந்த வருடமும் இம் மாணவர்கள் சம்பியனாக தேர்வாகி இப் பாடசாலைக்கும் கல்குடா வலயத்திற்கும் பெருமை சேர்த்திருந்தனர்.
எனவே இதில் பங்கு கொண்டு எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள், வழிப்படுத்திய திருமதி.S.சிவனேசாராஜாஉடற் கல்வி ஆசிரியை, உறுதுணையாக இருந்த எமது கல்லூரியின் முதல்வர் மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

0 Comments:
Post a Comment