26 Jul 2017

வெல்லாவெளி பொலிஸ் நிலையம் புதிய கட்டடத்திற்கு மாற்றம் - பொலிஸ்மா அதிபர் பங்கேற்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் நிலையம் எதிர்வரும் சனிக்கிழமை (29) அதன் புதிய கட்டத்திற்கு மாற்றப்படவுள்ளதாக கொழும்பு தலைமையகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


வெல்லாவெளிப் பிரதேசத்திற்கான பொலிஸ் நிலையம் இதுவரை காலமும் மண்டூரில் அமைந்துள்ள தனியார் வீடுகளில் இயங்கி வருகின்றது. இப்பொலிஸ் நிலையத்தை அவர்களுக்கென வெல்லாவெளி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாதாந்தம் நடைபெறும் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இதுவரை காலமும் இப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் நிலையம் மண்டூரில் இயங்கிவந்தமையால் இப்பிரதேச மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை (29) உத்தியோக பூர்வமாக பொலிஸ் நிலையத்திற்கென வெல்லாவெளி கிராமத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாகொட ஆராச்சி, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர, மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: