ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஏறாவூர் நகரத்தில் உள்ள ஜாமிஉல் அக்பர் பள்ளிவாசலில் இருந்து கடந்த 28.06.2017 அன்று திருடிச் செல்லப்பட்ட பல்ஸர் ரக பிபிஎச் (BBH) 7753 எனும் கறுப்பு நிற மோட்டார் சைக்கிள் சந்திவெளியிலுள்ள வாவிக்கரையோர பற்றைக் காட்டுக்குள்; இருந்து கடந்த வெள்ளிக்கிழமை 07.07.2017 மாலை மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பிரதான வீதியைச் சேர்ந்த அச்சி முஹம்மது முஹம்மது றாபி (வயது 30) என்பவர் தொழுகையை மேற்கொள்வதற்காக பள்ளிவாசல் வளவினுள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டுச் தொழுகைக்குச் சென்று திரும்பிய 10 நிமிட இடைவெளியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.
இலக்கத் தகடு அற்ற நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் செஷி இலக்கத்தை அவதானித்தே தாம் இந்த மோட்டார் திருடப்பட்டது என்று உறுதிப்படுத்தியதாக தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளின் இருக்கை, முன் பின் சேறுதாங்கி என்பன மாற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டில் ஈடுபட்ட நபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

0 Comments:
Post a Comment