12 Jul 2017

கோயிலில் இருந்த பிள்ளையார் கற் சிலை திருட்டு

SHARE
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவளையாறு கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயிலில் இருந்த பிள்ளையார் கற் சிலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்தனர்.


வெள்ளிக்கிழமை இரவு இத்திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கோயில் மூலஸ்தானத்தில் இருந்த இச்சிலையை திருடிச் சென்றவர்கள் கோயிலுக்குள் தேசிக்காய் வெட்டி களிப்புச் செய்திருப்பதாகவும் வெட்டப்பட்ட தேசிக்காய் மீதிகள் அங்கு காணப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: