12 Jul 2017

மக்களின் குறைபாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு எடுத்துரைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று பிரதேசத்தின் பதுளை வீதியை அண்டியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமங்களிலுள்ள அடிப்படைத் தேவைகள் குறித்து ஊடகங்களுக்குக் கொண்டுவரும் வகையில் ஊடகவியலாளர்களுக்கும்
அப்பகுதி மக்களுக்கும் இடையிலான சந்திப்பு சனிக்கிழமை (08) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

சொண் எனும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் அவ்வமைப்பின் காரியாலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அப்பகுதியிலுள்ள இராஜபுரம், மரப்பாலம், மாதவனை, மயிலத்தமடு, கித்துள், புல்லுமலை, உறுகாமம் போன்ற பல கிராமங்களிலுள்ள கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சொண் அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகவியாலாளர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ச்சியான காட்டு யானைகளின் தொல்லைகள், இதுவரையில் புணரமைக்கப்படாத நிலையில் காணப்படும் வீதிகள், வீதி மின்விளக்குகள் இல்லை, போக்குவரத்து வசதியின்மை, முறையான வடிகான்வசதியின்மை, குளங்கள் புணரமைக்கப்படாமை , மேச்சல்தரைப் பிரச்சனை, குநீர்பிரச்சனை, உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் அப்பகுதி மக்கள் ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இவ்விடைங்கள் குறித்து அடுத்தவராரம், நேரடியாக உரிய இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்வது எனவும், மக்களின் இக்கோரிக்கைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டுவருவது எனவும், இதன்போது தீர்மானிக்கப்பட்டன.




SHARE

Author: verified_user

0 Comments: