நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியல் சீர்திருத்தம் தயாரித்தல் தொடர்பான பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக தலைவர் எஸ் மாமாங்கராஜா தலைமையில் மட்-வின்சென்ற் மகளீர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.இங்கு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அரசியல் அமைப்பு மீளாய்வு மக்கள் பிரதிநிதிப் பேரவையின் விஷேட நிர்வாக அதிகாரி எஸ்.வின்சென்ற் பத்திராஜா அவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் அமைப்பு தயாரித்தல் தொடர்பான விஷேட சிறப்புரை ஒன்று இங்கு இடம்பெற்றது.அவர் தனதுரையில்
வடக்குக் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் முகமாக அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அவர்களுக்கான புதிய அரசியல் அமைப்பு அமையப் பெறுவதன் மூலம் இடம்பெறவுள்ள தேர்தல்களில் அவர்களுக்கு நன்மைகள் கிடைக்கவே நல்லாட்சி அரசாங்கம் இதுபோன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றதெனத் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு மாவட்ட அரசாங்க அதிபர் பி எஸ்.எம்.சாள்ஸ் மதத் தலைவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் வைத்தியர் ம.ந கருணாகரன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ம.நவேஸ்வரன் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இவ் நிகழ்வில் வளவாளர்களாக பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் பீட விரிவுரையாளர்களான பி.எம்.சைவ்டீன் நவரெத்தினம் -சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்
0 Comments:
Post a Comment