மண்முனை வடக்கு கல்விக்கோட்டத்தின் "கோட்டமட்ட கலைவிழா"வெள்ளிக்கிழமை (30.6.2017) பிற்பகல் 2.30 மணியளவில் மண்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்களும்,சிறப்பாக அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் ஆகியோர்களுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா,கோ.கருணாகரம்(ஜனா), முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,பிரதி கல்விப்பணிப்பாளர்களான திருமதி சங்கரி கங்கேஸ்வரன்,எஸ்.நடராஜா,ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஊடகவியலாளர்கள் மாணவர்கள், பெற்றோர்கள்,கலந்துகொண்டார்கள்.
இதன்போது தமிழர்களின் பாரம்பரிய,பண்பாட்டு கலைகளான கூத்து,நாட்டார் பாடல்கள்,ஜல்லிக்கட்டு, யோகா நடனம்,கரகாட்டம், தனிநடனம்,குழுநடனம்,உட்பட இருபத்தியொன்று(21
கலை நிகழ்வு)மிகவும் எழுச்சியுடனும் சிறப்பாகவும் மேடையேற்றப்பட்டது.
இதன்போது பல வருடங்களாக தமிழர்களின் பாரம்பரிய இசைக்கலையை சிறப்பாக கற்று அதன்மூலம் இசைக்கலையை வளர்த்தெடுத்து, எமது சந்ததிக்கு இசைக்கலையை கையளித்துக்கொண்டிருக்கும் இசைக்கலைமாமணிகள் அதிதிகளினால் பொன்னாடை போற்றி,மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
இதவேளை மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளராக இருந்துகொண்டு மாவட்டத்தின்
கல்விவளர்ச்சிக்கும்,கலைக் கலாச்சார நிகழ்வுக்கு அடித்தளமிட்டு செயற்பட்டுக் கொண்டிக்கும் ஏ.சுகுமாரன் அவர்கள் இவ்வருட இறுதியில் ஓய்வுபெற்று செல்வதையிட்டு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்தி சபையினரால் பொன்னாடை போற்றப்பட்டு, வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு,வாழ்த்துபா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.கோட்டமட்ட கலைநிகழ்வுகளை வலயக்கல்வி அலுவலகத்தின் உளவளத்துணை ஆலோசகர் அழகையா ஜெயநாதன் அவர்கள் இலக்கியத்தமிழில் தொகுத்து வழங்கினார்.
0 Comments:
Post a Comment