30 Jun 2017

மிகவும் பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் , வீடியோ)

SHARE
மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் வெள்ளிக்கிழமை (30) ஆனி உத்திர தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.

ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம் வந்தது. 

இதன்போது ஆலயத்தில் கூட்டுப்பிரார்தனை, மேள தாள வாத்திய இசைக்கச்சேரி, என்பனவும் இடம்பெற்றன. இதன்போது பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலய முன்றலில் அமையப் பெற்றுள்ள தீர்த்தக்குளத்தில் பக்தார்களின் அரோகரா என்ற ஓசை முழங்க சுவாமி தீர்த்தமாடினார்.

கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவ.ஸ்ரீ.சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.

கடந்த 21 ஆம் திகதி பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமான இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

























































































SHARE

Author: verified_user

0 Comments: