சுகாதார அமைச்சினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றடெங்குநுளம்பின் தாக்கத்திலிருந்து நாட்டைக் காப்போம்.எனும் துரித செயற்றிட்டத்தினை முழுமையாகநிறை வேற்றும் பொறுப்பு பொதுமக்களில் தங்கியுள்ளது. தாம் வாழ்கின்றசுற்றுச் சூழலைமுறையாக பாராமரிப்பதன் மூலமாககொடியடெங்குநுளம்புகளின் தாக்கத்திலிருந்துதப்பித்துக் கொள்ளமுடியும்.
இவ்வாறுகளுவாஞ்சிகுடிபிரசேதசெயலகப் பிரிவிலுள்ள பெரியகல்லாறு கிராமத்தில் அண்மையில் தேசியடெங்கு ஒழிப்புமாதத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வினை ஆரம்பித்துவைக்கும் போதேகளுவாஞ்சிகுடி பிரதேசபொதுசுகாதார வைத்தியஅதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் இவ்வாறுதெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது டெங்குஅற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் தங்கியுள்ளது. இதனை ஒவ்வொருவரும் இன்றையகாலகட்டத்தில் கடைப்பிடிக்கவேண்டும்.பொதுச் சுகாதாரபரிசோதகர்களின் ஆலோசனையினைபின்பற்றி அதற்குஏற்றவகையில் உமது சூழலைநாமேபாதுகாக்க வேண்டும். முதலில் டெங்குநுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காண்பதுஅவசியமானது. அதற்கு அடுத்தபடியாக அவற்றினை அழிப்பதற்கான நடவடிக்கையினை துரிதமாகமேற்கொள்ள வேண்டும்.
கிழக்குமாகாணத்தில் மிகஅண்மைக் காலமாக டெங்குநுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளநிலையில் அதனைகட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேசரீதியில் மாபெரும் டெங்குஒழிப்புநிகழ்ச்;சித் திட்டத்தினைமுன்னெடுத்துள்ளோம்.மக்கள் மத்தியில் டெங்குநுளம்பின் தாக்கம் தொடர்பாக விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்தமையால் ஓரளவு டெங்குநுளம்பின் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளன. எதிர் வரும் காலங்களில் முற்றாககுறைப்பதற்கானநடவடிக்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மட்டுமல்லாது இராணுவம் பொலிஸார் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைக்கப்பட்டுள்ளதாககுறிப்பிட்டார்.

0 Comments:
Post a Comment