20 Apr 2017

புகையிரதப் கடவைப் பாதுகாப்பு ஊழியர்கள் மட்டக்களப்பு பகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.

SHARE
புகையிரதக் கடவைப் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தங்களை நிரந்தரமாக்கக் கோரி மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்னால் புதன்கிழமை (19.04.2017) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.


தற்காலிகமாகக் கடமைபுரியும் கடவைப் பாதுகாப்பு உழியர்கள் மட்டக்களப்பு ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 4 வருடங்களாக மட்டக்களப்பு முதல் வாகனேரி வரையுள்ள 24 கடவைகளில் பணியிலீடுபடும் 72 பேர் கலந்து கொண்டனர்.

பொலிஸ் திணைக்களத்தின் ஆலோசனைக்கிணங்க கடந்த 2013.07.03 ஆம் திகதி முதல்; ஊழியர்களுக்கு ரூபாய் 7000 முதல் 7500 ரூபாய் வரை மட்டுமே கொடுப்பனவு வழங்கப்படுகின்றது என்றும் தமக்கு எதுவிதமான ஊக்குவிப்புப் படிகளோ, பண்டிகை முற்பணங்களோ வழங்கப்படுவதில்லை எனவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

“நல்லாட்சியின் முகம் இதுதானா, அடிப்படை தொழில் சட்டத்தை மீறாதே, நிரந்தர நியமனம் வழங்கு, ரூபாய் 7500 இற்கு எப்படி வாழ்வது, ஏமாற்றாதே ஏமாற்றாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

தற்காலிகமாகக் கடமைபுரியும் உழியர்களை நிரந்தரமாக்கக் கோரிய மகஜர் பொலிஸ் மா அதிபருக்கு வழங்குவதற்காக அதன் பிரதியை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.ஜி.எச். திகாவத்துரவிடம் ஆர்ப்பாட்டக் காரர்கள் கையளித்தனர்.

வடக்கு, கிழக்கில் மொத்தம் 1230 பேர், 4 வருடங்களாக நிரந்த நியமனம் இல்லாது பாதுகாப்பற்ற ரயில் கடவைக் காப்பாளர்ளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.






SHARE

Author: verified_user

0 Comments: