மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீள்குடியேற்றக் கிராமமான சூடுபத்தினசேனை மஜ்மா மேற்கு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழiமை 09.04.2017 இரவு புகுந்த காட்டு யானைகளினால் வீட்டுத் தோட்டங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
கிராமத்திற்குள் நுளைந்த காட்டு யானைகள் கூட்டம் தென்னை, வாழை, பலா, முந்திரி போன்ற பயன்தரும் மரங்களை சேதப்படுத்தி துவம்சம் செய்துள்ளன.
இந்தக் கிராமத்தில் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கிராம மக்கள் தினமும் காட்டு யானைகளின் அச்சத்தினால் இரவில் சத்தமின்றி ஒடுங்கி வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி நீண்ட நாட்கள் பராமரித்து வளர்த்த பயன்தரும் மரங்களளை காட்டு யானைகள் ஒரே இரவில் அழித்து விடுவது தங்களுக்குக் கவலையளிப்பதாகவும் கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதனால் காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுளையும் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை பெற்றுத் தருமாறு அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேண்டி நிற்பதாகவும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment