10 Apr 2017

கிழக்கில் 4103 பட்டதாரிகளினுடைய வெற்றிடங்களை நிரப்ப விரைவில் அனுமதி

SHARE
கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்பு வழங்குவதற்காக அனைது விடையங்களையும் மத்திய அரசிற்கு பாஸ்க்கரலிங்கத்தின் தலைமையிலுள்ள குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு வேலை வாய்ப்புக்குரிய வெற்றிட அனுமதி ( காடர் அனுமதி)  கிடைக்க வேண்டியுள்ளது. இதற்குரிய அனுமதியை கிழக்கு மாகாணத்திற்கு துரிதப்படுத்திக் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். எனவே மிகவிரைவில் இதற்குரிய அனுமதியை எதிர்பார்த்திருக்கின்றோம்.


என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளையின் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள வீட்டிற்குச் ஞாயிற்றுக் கிழமை (09) வருகைதந்திருந்த முதலமைச்சர்  ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

4103 பட்டதாரிகளினுடைய வெற்றிடங்களையும், ஒரு சில பாடசாலை அதிபரிகளின் வெற்றிடங்களையும் நிரப்பித்தரும்படி மத்தியரசிடம் கேட்டிருக்கின்றோம். கடந்த வாரம் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவைச் சந்தித்திருந்ததன் பேரில் 1200 பட்டதாரிகளுக்கு சமுர்த்தியிலே வடக்கு கிழக்கில் தொழில் வாய்ப்புக்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இதில் 600 இற்கு மேற்பட்ட பட்டதாரிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து உள்வாங்கப்படவுள்ளார்கள்.

இந்நிலையில் மக்களுக்கெதிரான விடையத்தை கிழக்கு மாகாணத்தில்  செய்வதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது அந்த வகையில் மட்டக்களப்பு கும்புறுமூலையில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இத்தொழிற்சாலை தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம் என்ற போர்வையில் உருவாக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டம் யுத்தகாலத்திலிருந்து தற்போது வரையில் ஒப்பிடுகையில் மதுபாவனையில் 3 மடங்கு அதிகமாகவுள்ளது. எனவே இத்தொழிற்சாலையை மட்டக்களப்பில் அமைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. என தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் இன்னும் ஒரு சில மாதங்களில் படுவான்கரையில் தொழில் பேட்டை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்நெடுக்கப்படும். எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: