கிழக்குப் பிரதேசத்துக்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டம் தயாரித்தலுக்கான பங்குதார்களுடனான முதல்கட்ட கலந்துரையாடல் வியாழக்கிழமை (06) பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்கஅதிபர் திருமதிபி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இலங்கையின் அபிவிருத்திக்கான நான்கு வலயத்திட்டத்தில் கிழக்கு வலயத்திற்கான ஆய்வுக்கலந்துரையாடலே இதுவாகும்.
இத்திட்டத்தினைத் தயாரிக்கும் பொறுப்பினை ஏற்றுள்ள மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நகரமற்றும் கிராமியத்திட்டமிடல் பீடத்தினால் இந்தக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் இப்பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சானக்க காரியவசம், விரிவுரையாளர் ஷாலினிமரியதாஸ் ஆகியோர் பங்குகொண்டனர். மட்டக்களப்பு மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்டத்தின் 14 பிரதேசசெயலாளர்கள், கிழக்குப் பல்கலைக்கழகதுறைசார் சிரேஸ்ட விரிவுரையாளர்கள் பங்குகொண்டனர்.
இத்திட்டத் தயாரிப்பினைமொரட்டுவபல்கலைக்கழகத்தின் நகரமற்றும் கிராமியத்திட்டமிடல் பீடத்தின் விரிவுரையார்களின் வழிகாட்டலில் 3ஆம் வருடமாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், விவசாயம், மீன்பிடி, நீர்வழங்கல், நீர்ப்பாசனம், வீதிஅபிவிருத்தி, நகரஅபிவிருத்தி அதிகாரசபை, கரையோரம்பேணல், வனவளம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டதிணைக்களங்களின் தலைவர்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலில் துறைசார் மேம்பாடுகள், தேவைப்பாடுகள், தற்போதையநிலைமைகள் உள்ளிட்ட பல்வேறுவிடயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. திட்டம் தயாரிப்பிலிருந்து இத்திட்டம் 2017 முதல் 2050 ஆம் ஆண்டுவரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதில்,பொருளாதார அபிவிருத்தி, சமூகஅபிவிருத்தி,உட்கட்டமைப்பு,சுற்றாடல் மேம்பாடு உள்ளிட்டதுறைகளில் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, வர்த்தகமற்றும் வியாபரம், கல்விஎனப் பல்வேறுபட்டபிரிவுகளிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தஆரம்பக்கட்டஆராய்வுகள் மாவட்டரீதியாக மேற்கொள்ளப்பட்டு அடுத்து அமைச்சுமட்ட கலந்துரையாடல்கள், தொழில்நுட்பக்குழு ஆராய்வுமற்றும் செயற்திட்ட பூரணப்படுத்தல்களையடுத்து திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
தேசியபௌதீகதிட்டமிடல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் ஒருவலயமாகவும், கொழும்பு திருகோணமலை ஒருவலயமாகவும்,காலி - ஹம்பாந்தோட்டை ஒருவலயமாகவும் அம்பாறை மட்டக்களப்பு ஆகியமாவட்டங்கள் மற்றொருவலயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் கட்ட மேகிழக்குப் பிரதேசத்துக்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டம் தயாரித்தலாகும்.









0 Comments:
Post a Comment