12 Mar 2017

பெண்கள் பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றார்கள்.

SHARE
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றார்கள். போர்க்களத்தில்கூட பெண்கள் பல பயிற்சிகளைப் பெற்றும், பல பயிற்சிகளை மற்றவர்களுக்கு வழங்கக் கூடிய ஆற்றல்களையும்
உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

என சைவப் புவலவர் திருமதி.ஞா.சிவானந்தஜோதி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சமூக வலுவூட்டல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்ட நிகழ்வு ஒன்று களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே ஆவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மூக வலுவூட்டல் நிறுவனத்தின் சிரேஸ்ட்ட ஆலோசகர் கதிர்.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலும் குறிப்பிட்ட அவர்…

1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவள் யான்சிராணி என்கின்ற பெண். இந்த யான்சிராணி போர்த்திறனும், நிருவாகத்திறனும், எல்லைப் பாதுகாப்பும், அரசியல் ஆளுமையும் கொண்டவராகக் காணப்பட்டிருந்தாள். அப்போதைய காலகட்டத்தில் யானிசிராணியின் போர்த்திறண்களைக் கண்டு பலர் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.

இந்துசமயம் மாத்திரம் பெண்களுக்குப் பலம் கொடுக்கவில்லை எல்லா சமயங்களும் பெண்களுக்குப் பலத்தைக் கொடுத்திருக்கின்றன. என அவர் மேலும் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: