மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகத் திற்குட்பட்ட
பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
இப்பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் புனரமைப்பு கூட்டமானது மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஒன்றுகூடல்
மண்டபத்தில் சனிக்கிழமை (11) பிரதேச இளைஞர்
சம்மேளனத்தின் முன்னாள் பொருளாளர் எஸ்.ரஜனிகாந் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்
மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி திருமதி கலாராணி ஜேசுதாசன், பிரதேச செயலக நிருவாக உத்தியோகஸ்தர்
எஸ்.தபேந்திரன், பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி சதீஸ்வரி கிருபாகரன், சி.அருளானந்தம்,
திறன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் இ.விவேகானந்தராசா, பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்
கு.துஷாந்தன், இப்பிரதேசத்தில் அமைந்துள்ள 45 கிராம சேவை உத்தியோகஸ்தர் பிரிவிலும்
உள்ள இளைஞர் கழகங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது புதிய பிரதேச சம்மேளனம் புணரமைக்கப்பட்டன.
தலைவராக இ.ரகுராஜ், உபதலைவராக தே.துவாரகாஇசெயலாளராக பிரதேச இளைஞர் சேவை
அதிகாரி திருமதி சதீஸ்வரி கிருபாகரன், உபசெயலாளராக பீ.அன்ரூ, பொருளாளராக ரீ.லிகிர்தன்இஅமைப்பாளராக
எஸ்.பிரியதர்ஷன், உப அமைப்பாளராக சு.வதுர்ஷன் ஆகியோர்களுடன் விளையாட்டுப்பிரிவுக்கு
எஸ்.சுபானுஜன். கலாச்சாரப்பிரிவுக்கு எஸ்.பாமினி, முயற்சியாண்மைப்பிரிவுக்கு பீ.பானுஜன்,
தகவல் ஊடகப்பிரிவுக்கு செ.சனோகாந், தேசியசேவைக்கு இ.துஷாந்து, கல்விப்பயிற்சி தொழில்
வழிகாட்டல் இ.சலாக்கி, நிதிப்பயன்பாடு எஸ்.ஐங்கரன், சூழல்பாதுகாப்பு ரீ.டினராஜ், கணக்காய்வாளர்
எஸ்.சகானா ஆகியோர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நியதியற்கட்டளையின் பிரகாரம்
இவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
மேலும் ஐந்துபேர் ஒழுக்கக்குழுவுக்கு தெரிவு செய்ததுடன் இதன் ஆலோசர்களாக
பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகஸ்தர்இஇளைஞர் சேவை அதிகாரி. திறன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்
ஆகியோர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள். இதன்போது எதிர்வரும் காலத்தில் பிரதேச
இளைஞர் சம்மேளனம் வினைத்திறனுடன் செயற்படவேண்டும் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டார்.











0 Comments:
Post a Comment