22 Mar 2017

மட்டக்களப்பில் திறக்கப்படுகிறது தீரனியம் - ‘ஓட்டிசம்’ சிறுவர் பாடசாலை , பயிற்சி நிலையம்

SHARE
‘தீரனியம்’ ஓட்டிசம் பிள்ளைகளிற்கான திறந்த பாடசாலை, பயிற்சி நிலையம் எதிர்வரும் 8ம் திகதி காலை 7.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு உளநலச்சேவைகள் சிரேஸ்ட உளநலமருத்துவர் டாக்டர். பா. யூடி ரமேஸ் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் சுகாதார வேலைகள் பணிப்பாளர், டாக்டர் ஜெயசுந்தர பண்டார, பிரதாஸ் சரிட்டி’ ஆசிய இயக்குநர் அருட்சகோ. கோட் பிரீட், ஆகியோரினால் இப்பாடசாலை திறந்து வைக்கப்படவுள்ளது.

இப்பாடசாலையின் ஆரம்பக்கட்ட வேலைகள் யாவும் நிறைவடைந்துள்ளதுடன் ஒட்டிசம் பாடசாலையின் வெறிப்புற அழகுபடுத்தல் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்கும் வேலைகளை சமூகப்பங்களிப்புடனான செயற்திட்டத்தின் கீழ் சமூக மீளிணைவின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு விமானப்படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19) மேற்கொண்டனர். இதில் 30க்கும் மேற்பட்ட விமானப்படையினர் பங்கு கொண்டனர்.

கத்தோலிக்க திருச்சபையின் ‘பிரதாஸ் சரிட்டி’ தன்னளர்வு தொண்டு நிறுவனம் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் நிதி பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட  ‘தீரனியம்’ ஓட்டிசம் பிள்ளைகளிற்கான திறந்த பாடசாலை, பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்படுகிறது.

இதன் மூலம் மட்டக்களப்பு உட்பட கிழக்கு மாகாணத்தில் ‘ஓட்டிசம்’ மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவதோடு, பெற்றோர், ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், வைத்தியர்கள், தாதிய மாணவர்கள் ஏனைய உத்தியோகத்தர்களிற்கும் ‘தீரனியம்’குறித்த பயிற்சி நெறிகளை வழங்கமுடியும்.
இதுவோர் சர்வதேச ‘ஓட்டிசம்’ விழிப்புணர்வு நாள் செயற்பாடாகவும் அமைந்திருக்கிறது என்றும் டாக்டர். பா. யூடி ரமேஸ் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் சித்திரைமாதம் 2ம் திகதி சர்வதேச ‘ஓட்டிசம்’ விழிப்புணர்வு நாள் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் இதன் தொனிப்பொருள் ‘சுயதீனமாக வாழ்வதற்கான உரிமைகளை நோக்கி’ (‘வுழறயசன யுரவழழெஅல யனெ ளுநடக னுநவநசஅiயெவழைn) என பெயரிடப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை சாசனத்தின் படி எந்தவொரு மனிதனும், மாற்றுத்திறனாளியும் தனது சுயாதீனத்துடன் சுயமாக இயங்கும் நிலைகளை வலியுறுத்துகிறது.  அந்தவகையில் ‘ஓட்டிசம்’ மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட்டு, கல்வி கற்கை, சாதாரண பாடசாலைகளில் கல்விபயில, வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள, சமூக நிறுவனங்களால் புறமொதுக்கப்படாமல் இருப்பதற்கு, மனித உரிமைசாசனத்தின் 3ம், 12ம் சரத்துகள் வற்புறுத்துவதுடன் இவை மீறப்படுவது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதையும் நினைவிற் கொள்வோம்.
உலகலாவிய ரீதியாக பிறக்கின்;ற பிள்ளைகளில் ‘ஓட்டிசம்’ எனப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் மிக அதிகளவில் இனங்காணப்படுகின்றார்கள். ஆமெரிக்காவில் பிறக்கின்ற 68 குழந்தைகளில் ஒருவர் என்ற விகிதத்திலும், இங்கிலாந்தில், அவுஸ்ரேலியாவில் 100 குழந்தைகளில் ஒருவர்என்ற அளவிலும், ஆச்சரியமாக இலங்கையில் பிறக்கின்ற 90 குழந்தைகளில் ஒருவர் எனவும் இனங்காணப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவில் 3.2 மில்லியன் மக்கள் ஓட்டிசத்துடன் வாழ்கிறார்கள். பெண் பிள்ளைகளைவிட ஆண் பிள்ளைகளில் இதன் தாக்கம் அதிகம். நியூட்டன், அல்பேர்ட் அன்டீன், சார்ள்ஸ் டார்வின், பில்கேட்ஸ், அப்துல் கலாம் போன்றவர்களிலும் மிதமானஅளவில் ‘ஓட்டிசம்’ இருந்ததாக கூறப்படுகின்றது.  1963 டாக்டர். லியோகானர் என்ற உளநல மருத்துவர் ஓட்டிசம் குறித்த விபரிப்புக்களை வெளியிட்டார்.

அன்றுமுதல் உலகளாவியரீதியாக இப்பிரச்சனைகள் இனங்காணப்பட்டபோதிலும் பெரும்பாலான நாடுகளில் இன்றுவரை இப்பிள்ளைகளுக்கான தனித்துவமான இடையீடுகள், பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. பொதுவாக இவ்வாறு இனங்காணப்படுகின்ற பிள்ளைகள் மூளை விருத்திசார்ந்த மாற்றுத்திறனாளிகள் பாடசாலைகள், சாதாரண பாடசாலைகளிற்கும் அனுப்பமுடியாத அளவில் அவர்கள் தனிமைப்பட்டு வீடுகளிலேயே உள்ளார்கள்.

இலங்கையிலும் சிறுவர் மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள் இப்பிரச்சனைகளை இனங்கண்டபோதும், அவர்களுக்கான விசேட அணுகுமுறைகள், கற்பித்தல் முறைகள் சாதாரண பாடசாலைகளுடன் இணைத்துவிடுதல், பெற்றோர்களிற்கான வழிகாட்டல்கள், சமூக விழிப்புணர்வுச் செயற்பாடுகள்    மிகக் குறைவாக உள்ளன. அரசாங்கமும் இதனது தேவையை இதுவரை சரியாக உணர்ந்து கொள்ளவில்லை.
இனங்காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளில் சாதாரண, மிதமான, பாரிய அளவில் பிரச்சனைகள் இருப்பதை கண்டு கொள்ளலாம். பிள்ளைகள்; மூன்று வயதை அடைவதற்குள் முதலில் பெற்றோர்களனாலும் பின்னர் முன்பள்ளி ஆசிரியர்களினாலும் இப்பிள்ளைகள் இனங்காணப்படுவர். இவர்களில் கண் தொடர்பு, சமூக தொடர்பாடல் பாதிக்கப்படுவதுடன் தமது தேவைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல், சேர்ந்து விளையாடுதல், பல்வேறுவிதமான உடல் உணர்வுகளை வெளிக்காட்டுதல் போன்றவையும் பாதிக்கப்படும.; அவர்களது பேச்சுஇ மொழி நடைமாறுபட்டதாக அமையும்.

ஒரேவிடயத்தை மீண்டும் கதைக்கலாம். நாங்கள் சொல்லும் விடயத்தையே மீண்டும் சொல்லலாம் அல்லது பதிலளிக்காமல் தன்வழியே குறிப்பிட்ட விளையாட்டு அல்லது செயலுடன் ஈடுபடலாம். இம்மாணவர்களை ஆரம்ப வகுப்புகளில் சாதாரண மாணவர்களுடன் சேர்த்து கல்விச் செயற்பாடு கிளை முன்னெடுப்பது கடினமாக அமையும். அல்லாது போனால் இதற்கென பயிற்றுவிக்கப்பட்ட விசேட ஆசிரியர்களின் உதவியுடனேயே கற்பித்தல் செயற்பாடுகள் இடம் பெறவேண்டும்.

இருந்தபோதும் இவர்களிற்கானபிரத்தியேகபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு, அங்கு ஆரம்ப செயற்பாடுகளை ஆரம்பித்து, அவற்றில் முன்னேற்றம் கண்டுள்ள சிறுவர்களை ஆசிரியர், பெற்றோர், சகமாணவர்கள், ஆகியோருடன் கலந்துரையாடி சகமாணவர்கள் உட்படஅனைவரும் ஏற்றுக்கொண்டு, வகுப்பறை செயற்பாடுகளில் ஈடுபடவைப்பது மிகப் பயனுடையது.



SHARE

Author: verified_user

0 Comments: