(ஏ.எச்.ஏ. ஹ{ஸைன்)
மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி பூங்கா அலுவலர் தொழில் அலுவலகத்தில் ஊதியம் பசயவரவைல கேட்டு முறைப்பாடு செய்ததன் பிரகாரம் விசாரணைக்குச் சமுகமளித்ததாக மேற்படி பூங்காவின் நிர்வாக இயக்குனர் அடிகளார் போல் சற்குணநாயகம் தெரிவித்தார்.
கடந்த டிசெம்பெர் மாதத்துடன் பணி முடிவுறுத்தப்பட்ட நிலையில் அந்த மாதம் வரை ஊதியம் பெற்ற அலுவலர் ஒருவரே தனக்கான பணிக்கொடையைக் கேட்டு மட்டக்களப்பு தொழில் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் நிதி முகாமையாளராகவும், முகாமைத்துவ உதவியாளராகவும் பணியாற்றிய அலுவலர் தனக்கான பணிக்கொடை கோரி தொழில் அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டதற்கமைய முறைப்பாட்டாளரான அந்த அலுவலருக்கு 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என்று தொழில் அலுவலகம் உத்தரவிட்டதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
1995ஆம் ஆண்டு முதற்கொண்டு மட்டக்களப்பில் இயங்கி வரும் சிறுவர் வண்ணத்துப்பூச்சிப் பூங்கா சமீப சில வருடங்களாக சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து போதியளவு நிதி கிடைக்காமையினால் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகச் சிறார்களின் மனவடுக்களைக் குணப்படுத்துவதற்காக கனடாவிலுள்ள மக் மாஸ்டர் பல்கலைக்கழகம் செய்த ஆய்வின் அடிப்படையில் இந்த குணப்படுத்தல் பூங்கா ஆரம்பிக்கப்பட்டது.
இயேசு சபைத் துறவி அடிகளார் போல் சற்குணநாயகம், சமூக சேவையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான ஏ.எச்.ஏ. ஹ{ஸைன் ஆகியோர் 1995ஆம் ஆண்டு கனடா சென்று அங்குள்ள சுழற்சிப் பூங்காவிலும் (Spiral Garden) உலகில் பல்வேறு நாடுகளில் போரினால் மனவடுக்களுக்குள்ளாகிய சிறுவர்களைக் குணப்படுத்தும் கனடா ரொரன்டோவிலுள்ள ஹக் மக் மில்லன் புனர்வாழ்வு நிலையத்திலும் ((Toronto, Canada at Spiral
Garden at Mc Million rehabilitation centre) பயிற்சிகளைப் பெற்று வந்து மட்டக்களப்பில் இந்தப் பூங்காவை ஆரம்பித்தனர்.
கடந்த சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இந்தப் பூங்காவில் தமிழ் முஸ்லிம் சிங்கள சிறார்கள் பல்லாயிரக்கணக்கானோர் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு குணப்படுத்தல் நிகழ்வுகளில் பங்குபெற்றுள்ளனர்.

0 Comments:
Post a Comment