21 Mar 2017

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஆர்.எம் தானீஸ் தெரிவு

SHARE
(எம்.எம்.ஜபீர்)

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின்  வருடாந்த நிர்வாக தெரிவு  சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.அஸீம்  தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்; நடைபெற்றது. 

இக்கூட்டத்துக்கு அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எம்.முபாறக் அலி, அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான இஸட்.எம் ஸாஜித், எஸ்.தில்சாத் அகமட், இளைஞர் கழக பிரதிநிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின்  2017 ஆம்  ஆண்டுக்கான புதிய  தலைவராக ஆர்.எம் தானீஸ் தெரிவு செய்யப்பட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: