26 Mar 2017

வாசத்தின் மணம் கறுவாச்சோலையிலும் வீசியது.

SHARE
(திலக்ஸ் ரெட்ணம்)

பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட கறுவாச்சோலை கிராமத்தில் தனிமையாக வசித்து வருகின்ற ஒரு தமிழ் குடும்பத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் வாசம் உதவும் உறவுகளினால் அக்குடும்பத்திற்கு சூரியபடல் மூலம் ஒளிரும் மின்விளக்கு நேற்று வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கலந்துகொண்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கறுவாச்சோலை கிராமமானது மட்டக்களப்பின் எல்லைக்கிராமமாகும். இங்கு 1983ம் ஆண்டு காலப்பகுதியில் 105 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளது. தற்போது ராணிமலரின் குடும்பம் மட்டுமே அடர்ந்த காட்டினுள்ளே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைத்து அடிப்படை வசதியையும் இழந்து தன் இனத்துக்காக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இவர்களை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா அவர்கள் சென்று சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.   அவர்களுக்கு மிகமுக்கிய தேவையாக மின்னொளி தேவையினை தெரிவித்தார்கள். அதனை தற்போது வாசம் உதவும் உறவுகள் அமைப்பினூடாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு முன்னர் வாழ்ந்த குடும்பங்களை மீள இக்கிராமத்திற்கு கொண்டுவருதலுக்கான ஊக்குவிப்பு செயற்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.  





SHARE

Author: verified_user

0 Comments: