5 Feb 2017

இணையத்தள செய்தியார்களுக்கான ஒழுக்க விதிகள் தொடர்பான விளக்கமளிக்கும் செயலமர்வு.

SHARE
இணையத்தள செய்தியார்களுக்கான ஒழுக்க விதிகள் தொடர்பான விளக்கமளிக்கும் செயலமர்வென்று ஞாயிற்றுக் கிழமை (05)  மட்டக்களப்பு வொய்ஸ் ஒவ் மீடியாவில் நடைபெற்றது. 
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இலங்கை இணையத்தள ஊடகவியலாளர் சங்கத்தன் தலைவர் பெடிகமகே மற்றும், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.  இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளையத்தள ஊடகவியலாளர்கள் பலர் காலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இணையத்தள செய்தியார்களுக்கான ஒழுக்க விதிகள் தொடர்பான அறிமுகம், சுருக்கிய சொற்பிரயோகங்கள், கடப்பாடுகள், தகவல் மற்றும் அறிக்கைப்படுத்தல், தகவல் மற்றும் செய்திகளைச் சேகரித்தல், தவறுகளை, குறைகளை நிவர்த்தி செய்தல், மூலங்களின் நம்பகத்தன்மை, செய்தி அறிவித்தல் தொடர்பான சமூக பொறுப்புக் கூறல், தனிநபர் மற்றும் இரகசியங்கள், இணைய ஊடகவியலாளர்களின் நடத்தை, பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுதல் போன்ற பல விடையங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: