24 Feb 2017

அரச அதிகாரிகளுக்கு எதிராக துப்பாக்கி சூடுகளை மேற்கொள்ளும் கலாச்சாரம்

SHARE
அரச அதிகாரிகளுக்கு எதிராக துப்பாக்கி சூடுகளை மேற்கொள்ளும் கலாச்சாரம் மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கத்தில் அரங்கேறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திரமாக செயற்படும் அரச அதிகாரிகள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ், மட்டக்களப்பு களுதாவளை 4 ஆம் பிரிவு சோமசுந்தரம் வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலை முன்பாக பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகத்தின் ஏற்ப்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், தமிழ் மக்களின் காணிகளை வேற்று இனத்தவர்கள், அரசியல் வாதிகள் மதகுருமார் சுவிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் காணி சுவிகரிப்பிற்கு பின்னால் உள்ளவர்கள் அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: