17 Feb 2017

பேராளர் மாநாட்டில் கட்சி சீரமைக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலமுகா வின் ஆதரவுத் தளம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்திருக்கின்றது ஸ்ரீலமுகா தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன்

SHARE
சமீபத்தில் நடந்த ஸ்ரீலமுகா வின் 27வது பேராளர் மாநாட்டில் கட்சி சீரமைக்கப்பட்டதன் அடிப்படையில் அக்கட்சிக்கான மக்கள் ஆதரவுத் தளம் கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்
செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை (16.02.2017) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது@

எதிர்வருகின்ற செப்டெம்பெர் மாதம் கலைக்கப்பட்டு இவ்வாண்டின் இறுதியில் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் மக்கள் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏனைய சகல கட்சிகளுடனும் இணைந்து இன மத பேதமின்றி தேசிய ஐக்கிய நல்லாட்சியை நிலைப்படுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மீண்டும் இந்த மாகாண ஆட்சியைக் கைப்பற்றுவது ஒரு சிரமமான காரியமல்ல.
தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலமுகா வின் ஆதரவுத் தளம் அதிகரித்திருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் ஒரு முன்னுதாரணமான பாரபட்சமற்ற நல்லாட்சி நிலவுவதன் காரணமாகவும் மத்திய அரசாங்கத்திலுள்ள ஸ்ரீலமுகாவின் அதிகாரங்களின் பலனாகவம் மக்கள் ஆதரவு மேலோங்கியிருக்கின்றது.
தற்போது ஸ்ரீலமுகா வுக்கு எதிராக சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கிழக்கில் கூட்டு முன்னணி ஆரம்பிக்கப் போவதாகவும் இவர்கள் வாய்ச் சவாடால் விடுகின்றனர்.

ஏற்கெனவே கட்சிக்கு உள்ளிருந்தும் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கட்சிக்கு வெளியே இருந்தும் கட்சியைப் பிளவு படுத்துவதற்கும் சிறுபான்மை முஸ்லிம்களைச் சீர்குலைப்தற்கும் சிலர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அவர்கள் யார் என்று மக்கள்  இனங்காண்பதற்கு உதவியிருக்கின்றது.

இந்த விடயத்தில் மக்கள் இப்போது தெளிவடைந்திருக்கின்றார்கள்.
தொடர்ச்சியாக மக்களால் நிராகரிக்கப்பட்டு வந்தவர்கள் ஸ்ரீலமுகா வில் அதிகாதரமி; மிக்க பதவி வகித்துக் கொண்டு அதன் பயனாக நாடாளுமன்றப் பதவிகளையும் அமைச்சுப் பதவிகளையும் அனுபவித்தவர்கள் இப்பொழுது வெளியே தூக்கி வீசப்பட்டதும் தமது சுய நல அரசியல் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கி கொக்கரிக்கிறார்கள்.

இந்த சமூகத்தை ஏய்த்துப் பிழைப்பதற்கு அவர்களுக்கு அந்தஸ்தும் அதிகாரமும் உள்ள பதவிகள் தேவை. அதனை வெட்கமில்லாமல் வாய்விட்டே கேட்கின்றார்கள்.

அதன் பெறுபேறாக ஸ்ரீலமுகா கட்சியையும் முஸ்லிம் சமூகத்தையும் சீர்குலைக்கும் கைங்கரியத்தில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டு கூலிக்குச் செயற்படுகின்றார்கள்.
இவர்களைப் போன்ற சமூகத் துரோகிகளை முஸ்லிம் சமூகம் தற்போது இனங்கண்டு விட்டது.

முஸ்லிம் கூட்டு முன்னணி அல்ல அவ்வாறு எந்த முன்னணி வந்தாலும் அதிலே ஏற்கெனவே  சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட சுயநலமிகளுக்கு மக்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார்கள்.

கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டு தற்போது கட்சிக்கு வெளியே இருந்து கொண்டு ஸ்ரீலமுகா வை விமர்சிப்பவர்கள் பச்சைச் சுயநலமிகள் என்பதையிட்டு மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.

கட்சியைப் பாதுகாக்கின்றவர்கள் மக்களே என்கின்ற அடிப்படையில் கட்சியின் ஆதரவுத் தளம் அதிகரித்திருக்கின்றது.

அதனடிப்படையில் எதிர்வருகின்ற எந்தத் தேர்தலிலும் ஸ்ரீலமுகா கிழக்கு மாகாணத்தில் தனது பலத்தை அமோக வெற்றியுடன் நிரூபிக்கும்.

SHARE

Author: verified_user

0 Comments: