தினகரன் பத்திரிகையின் 84 வது ஆண்டு சாதனைப் பணத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் புதன் கிழமை (15) இரவு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. இதன்போது தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் க.குணராசா, உதவி ஆசிரியர்களான மர்லின் மரைக்கார், அருள் சத்தியநாதன், அசோக்குமார், உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக பிரமுகளர்கள், உள்ளிட்ட சிவில் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர்களான சிவம் பாக்கியநாதன், இ.பாக்கியராசா, ரி.எல்.ஜௌபர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.முஸ்தபா, செ.போரின்பராசா, ஆகிய ஊடகவியலாளர்கள் தினகரன் பிரதம ஆசிரியர் க.குணராசாவினால் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தினகரன் பிரதம ஆசிரியர் க.குணராசா தலைமையில் நடைபெற்ற இந்நிவில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலார்கள் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், ஓய்வு நிலைப் பேராசிரியர் திருமதி.சித்திரலேகா மௌனகுரு ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அரசாங்க அதிபர் மற்றும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், உரையாற்றியதோடு, தினகரனின் தற்போதைய பரிணாமம் தொடர்பில் பிரதம ஆசிரியர் க.குணராசாவும், ஆரம்ப காலத்தில் தினகரனின் செயற்பாடுகள் தொடர்பில் பேராசிரியர் திருமதி.சித்திரலேகா மௌனகுருவும் உரையாற்றினர்.
0 Comments:
Post a Comment