17 Feb 2017

போரதீவுபற்று பிரதேசத்திற்கு உட்படட பின்தங்கிய பிரதேச மாணவர்களின் நலன்கருதி மேலதிக வகுப்புக்கள்

SHARE
மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேசத்திற்கு உட்படட பின்தங்கிய பிரதேச மாணவர்களின் நலன்கருதி  மேலதிக வகுப்புக்கள் சங்காரவேல் பவுண்டேசனின் உதவியுடன் ஆரம்பித்து வைக்ப்பட்டுள்ளதாக போரதீவுப்
பற்று கோட்டக்கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் செவ்வாய்கிழமை (14) தெரிவித்தார்.
   
மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஓய்வு நிலை உதவிக் கல்வி பணிப்பாளரும் பவுண்டேசனின் தலைவருமான சோ.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக தலைவர் இலண்டன் சிவன் கோவில் அறங்காவலர் சபை கலாநிதி து.சிறிஸ்கந்தராசா,  கோட்ட கல்வி அதிகாரி, தொழிலதிபர் .பரமேஸ்வரன் உட்பட பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
   

தரம் 10,11 இல் கல்வி கற்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், போன்ற பாடங்களுக்கு இவ் மேலதிக வகுப்பு நடைபெறும் எனவும் இது கஸ்ரபிரதேச மாணவர்களுக்கு இவ்வாற உதவியினை முன்வந்து மேற்கொண்டமைக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொளடவதாக கோட்டக்கல்வி அதிகாரி மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: