23 Feb 2017

விமலராஜின் மீதான துப்பாக்கிச்சூடு புலிப் பூச்சாண்டி காட்டுவதற்குரிய திட்டமிட்ட சதியா – வெள்ளிமலை.

SHARE
சில தீய சக்திகள் வெடிகளை வைத்து, துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு மக்களைப் பயம் காட்டி புலிப் பூச்சாண்டி காட்டுவதற்கும், புலிகள் மீண்டும் வந்து விட்டார்கள் என்று தமிழ் மக்களை மேலும் இம்சப்படுத்துவதற்கு உரிய திட்ட மிட்ட சதியா? எனவும் எண்ணத் தோணுகின்றது. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு
மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ( வெள்ளிமலை) தெரிவித்தார்.

புதன்கிழமை (22.02.2017) இரவு 7 மணியளவில் மட்டக்களப்பு களுதாவளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜின் வீட்டிற்கு வியாழக்கிழமை (23) சென்று உறவினர்களிடம் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்து விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத்  தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

நல்லாட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இவ்வாறான நல்ல சூழலை குழப்பும் தீய சக்திகளின் செயற்பாடுகள்தான் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்மபவத்திற்குக் காரணம் என நான் கருதுகின்றேன். இதுபோன்று கடந்த ஒருவருடத்திற்கு மேல் சமூக சேவை உத்தியோகஸ்தர் ஒருவரும் மட்டக்களப்பு மண்டூரில் சுடப்பட்டு உயிரிழந்தார் அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதாக இந்நாட்டின் பாதுகாப்புப் பிரிவினர் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாருலும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் மற்றுமொரு அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருந்த போதிலும்  புதன்கிழமை (22.02.2017) இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளர் ஒரு பிள்ளையின் தந்தையான நேசகுமாரன் விமல்ராஜ் (வயது 31)  அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட அந்த சூத்திர தாரிகளை 16, 17 மணித்தியாலங்கள் கடந்துள்ள இந்நிலையில் ( 23.02.2017 பி.ப.1.45 வரை) யாரும் கைது செய்யப்படவில்லை.

நல்லட்சியைக் கெடுக்கின்றவர்களும், இந்த அரசாங்கத்தின்மேல் சேறு பூசவேண்டும் என நினைக்கின்றவர்களும்தான் இதனை மேற்கொண்டுள்ளார்கள். இச்சம்பவம் ஒரு சத்தித்திட்டமாகும்.

எதிர் காலத்தில் இலங்கை நாட்டிற்கே காணி ஆணையாளராக வரக்கூடிய இளவயதுடைய காணி அதிகாரி மீது நன்கு திட்டமிட்டுத்தான் சூத்திரதாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். நாட்டிற்கே காணி ஆணையாளராக வரும் சூழல் வரக்கூடாது என்பதற்குரிய சதியாக இருக்கலாமோ எனவும் கருத வேண்டியுள்ளது.

சில தீய சக்திகள் வெடிகளை வைத்து, துப்பாக்கிப் பிரNhயகங்களை மேற்கொண்டு மக்களைப் பயம் காட்டி புலிப் பூச்சாண்டி காட்டுவதற்கும், புலிகள் மீண்டும் வந்து விட்டார்கள் என்று தமிழ் மக்களை மேலும் இம்சப்படுத்துவதற்கு உரிய திட்ட மிட்ட சதியா? எனவும் எண்ணத் தோணுகின்றது.

வடக்கு கிழக்கில் காணி விடையங்களில் பல பிரச்சனைகள் உள்ளன. அந்த வகையில் கடந்த 20 நாட்களால் கேப்பாப்பிளவு மக்கள் தமது காணியை விடுவிக்கக்கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கமர்திய சிறுபான்மையின மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் என்பதை இந்த நல்லாட்சி என்று சொல்லப்படுகின் அரசாங்கமும், ஜனாதிபதியும் கண்மூடித்தனமாக இருப்பது எந்த வகையில் நியாயமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: